புதுதில்லி, மார்ச்.14 (டிஎன்எஸ்) பாகிஸ்தானுடன் அடுத்த கட்ட பேச்சுவார்த்தையை தொடர இந்தியா ஒப்புதல் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தையில் மும்பை தாக்குதல் குறித்த விவாதம் நடத்தப்பட்டது. ஆனால் அது குறித்து எந்தவொரு தீர்வும் எட்டப்படாத நிலையில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (டிஎன்எஸ்)