Tamil Seithi Sevai
  Home    About Us    Contact Us
Login    |   Subscribe

சீக்கியர்களுக்கு எதிரான வன்முறை - வழக்கறிஞர்கள் நியமனம்

தேசியம் | Mon, 08 Feb 2010 05:50 PM IST

புதுதில்லி, பிப்.8 (டிஎன்எஸ்) 1984-ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக நடந்த வன்முறைகள் தொடர்பான வழக்கில் அரசு சிறப்பு வழக்கறிஞரை நியமிக்க தில்லி காவல்துறையும் சிபிஐயும் ஒப்புக் கொண்டிருக்கின்றன. இது தொடர்பாக தில்லி உயர்நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்திருந்தது.

1984-ம் ஆண்டு இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து தில்லி உள்ளிட்ட இடங்களில் சீக்கியர்களைக் குறிவைத்து வன்முறை நடந்தது. இது தொடர்பான வழக்கு தில்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்குகளைக் கையாள அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர்களாக மூத்த வழக்கறிஞர்கள் சிலர் நியமிக்கப்பட்டுள்ளதாக சிபிஐ சார்பில் தெரிவிக்கப்பட்டது.

பின்னர், இது தொடர்பான வழக்கு விசாரணைகளை 6 மாதத்துக்குள் முடித்துக் கொள்ளுமாறு கீழ்நீதிமன்றத்துக்கு தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. (டிஎன்எஸ்)

Home  |  About Us  |  Contact Us  |  Subscribe