Tamil Seithi Sevai
  Home    About Us    Contact Us
Login    |   Subscribe

தடைசெய்யப்பட்ட மருந்தை சாப்பிட்ட 4 பேர் பலி

தேசியம் | Sun, 14 Mar 2010 02:49 PM IST

டமோஹ், மார்ச்.14 (டிஎன்எஸ்) மத்திய பிரதேச மாநிலம் டமோஹ் மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட மருந்தை உட்கொண்ட 4 பேர் பலியாகி உள்ளனர்.

மேலும் 15 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 2 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.

தடை செய்யப்பட்ட  மருந்தை உட்கொண்டதில் 2 முதல் 12 வயதிற்குட்பட்ட 2 குழந்தைகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இப்பகுதியில் இந்த மருந்தை உட்கொண்ட 20 குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. (டிஎன்எஸ்)

Home  |  About Us  |  Contact Us  |  Subscribe