கொல்கத்தா, மார்ச்.15 (டிஎன்எஸ்) ஐபிஎல் டுவென்டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் நேற்றைய (மார்ச்.14) முதல் போட்டியில் பெங்களூரு ராயல சேலஞ்சர்ஸ் அணியை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றது.
முன்னதாக டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களம் இறஙகிய பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 20 வது ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்தது.
136 ரன் வெற்றி இலக்காகக் கொண்டு அடுத்து களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 19.1 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. (டிஎன்எஸ்)