Tamil Seithi Sevai
  Home    About Us    Contact Us
Login    |   Subscribe

பென்னாகரம்: மனுதாக்கல் முடிந்தது: சூடு பிடித்தது பிரசாரம்

தமிழ்நாடு | Wed, 10 Mar 2010 03:59 PM IST

பென்னாகரம், மார்ச்.10 (டிஎன்எஸ்) மார்ச்.3ஆம் தேதி தொடங்கிய பென்னாகரம் தொகுதி இடைத்தேர்தலுக்கான மனு தாக்கல் இன்றுடன் முடிவடைந்தது. இந்த தொகுதிக்கான இடைத் தேர்தல் 27ஆம் தேதி நடக்கிறது.

தி.மு.க. சார்பில் இன்பசேகரன், பா.ம.க. சார்பில் தமிழ்க்குமரன், அ.தி.மு.க. சார்பில் அன்பழகன், தே.மு.தி.க.சார்பில் காவேரிவர்மன் ஆகியோர் இந்த தேர்தலில் போட்டியிடுகிறார்கள். அவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டுள்ளனர்.
 
தேர்தலையொட்டி பென்னாகரம் தொகுதியில் நுழையும் அனைத்து வாகனங்களும் தீவிரமாக சோதனை நடத்தப்பட்டு அனுமதிக்கப்படுகிறது. அவ்வாறு நடத்தப்படும் சோதனையை போலீசார் வீடியோ காமிரா மூலமும் பதிவு செய்து வருகிறார்கள்.(டிஎன்எஸ்)

Home  |  About Us  |  Contact Us  |  Subscribe