
சென்னை, மார்ச்.10 (டிஎன்எஸ்) சுற்றுப்புறச் சுகாதாரத்தை பாதுகாத்து கட்டப்படும் பசுமை கட்டடங்களுக்கு வழங்கப்படும் தர நிர்ணய சான்றிதழான "தங்கத் தர நிர்ணய சான்றிதழ்" புதிய சட்டப்பேரவை வளாகத்தின பிளாக்-A கட்டடத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. சான்றிதழை முதலமைச்சர் மு கருணாநிதியிடம் இன்று (மார்ச்.9) சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் EN-3 நிறுவனத்தின் செயல் இயக்குநர் தீபா சத்தியராம், மேலாண்மை இயக்குநர் சத்தியராம் ஆகியோர் காண்பித்தனர்.
இந்தியன் கிரீன் பில்டிங் கவுன்சிலால் (INDIAN GREEN BUILDING COUNCIL-IGBC) சுற்றுப்புறச் சுகாதாரத்தை பாதுகாத்து கட்டப்படும் பசுமை கட்டடங்களுக்கு வழங்கப்படும் தர நிர்ணய சான்றிதழான "தங்கத் தர நிர்ணய சான்றிதழ்" (LEED - GOLD CERTIFICATE) இந்தியாவிலேயே மிகப்பெரிய அரசாங்க பசுமைக் கட்டிடமாக அமைந்துள்ள புதிய சட்டப்பேரவை வளாகத்தின் பிளாக்-A கட்டடத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. அச்சான்றிதழை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு கருணாநிதி அவர்களிடம் மார்ச்.9 அன்று சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் EN-3 நிறுவனத்தின் செயல் இயக்குநர் தீபா சத்தியராம், மேலாண்மை இயக்குநர் சத்தியராம் ஆகியோர் காண்பித்தனர். உடன் முதலமைச்சரின் செயலாளர் எஸ் ராஜரெத்தினம், பொதுப் பணித்துறை முதன்மைச் செயலாளர் எஸ் இராமசுந்தரம், சென்னை மாநகர காவல்துறை கூடுதல் ஆணையர் (போக்குவரத்து) எம் ரவி மற்றும் பொதுப் பணித்துறை உயர் அலுவலர்கள் உள்ளனர். (டிஎன்எஸ்)
