Tamil Seithi Sevai
  Home    About Us    Contact Us
Login    |   Subscribe

இயக்குநர்களுக்கான ஊதிய திட்டம் முதல்வர் துவக்கி வைத்தார்.

சென்னை | Wed, 10 Mar 2010 12:35 PM IST


சென்னை, மார்ச்.10 (டிஎன்எஸ்) தமிழ்த் திரையுலகில் ஒரு புதிய அணுகுமுறையாக திரைப்படத் தயாரிப்பாளர்கள் - இயக்குநர்கள் மற்றும் உதவி இயக்குநர்களுக்கு வழங்கக்கூடிய ஊதியங்களை இயக்குநர்கள் சங்கத்தின் மூலமாக வழங்கிடும் புதிய திட்டம் முதலமைச்சர் கலைஞர் அவர்களால் இன்று (மார்ச்.10) தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைக்கப் பட்டது.

இத்திட்டத்தின்படி, பெண்சிங்கம் திரைப்படத்தின் இயக்குநர் திரு. பாலிஸ்ரீரங்கம், உதவி இயக்குநர்கள் திரு. குணா, திரு. அரங்கன், திரு. முல்லை, திரு. குருமூர்த்தி, திரு. சுப்பிரமணியம்; குமரா திரைப்படத்தின் இயக்குநர் திரு. டி.கே. சண்முகசுந்தரம், உதவி இயக்குநர்கள் திரு. ராம்மோகன், திரு. முரளி; திருத்தணி திரைப்படத்தின் இயக்குநர் திரு.பேரரசு, உதவி இயக்குநர்கள் திரு. ஸ்ரீதர், திரு. மனோகர்;  மாப்பிள்ளை திரைப்படத்தின் இயக்குநர் திரு.சுராஜ், உதவி இயக்குநர்கள் திரு. ராஜதுரை, திரு. எஸ்.ஆர்.சூரியன்; மாஞ்சாவேலு திரைப்படத்தின் இயக்குநர் திரு.ஏ. வெங்கடேஷ், உதவி இயக்குநர்கள் திரு. கலைச்செல்வன், திரு. ராஜா; சீடன் திரைப்படத்தின் இயக்குநர் திரு.சுப்பிரமணியம்சிவா, உதவி இயக்குநர்கள் திரு. ஸ்ரீதர், திரு. தாயுமானவன்; பாஸ் என்கிற பாஸ்கரன் திரைப்படத்தின் இயக்குநர் திரு. எம். ராஜேஷ், உதவி இயக்குநர்கள் திரு. ராஜசேகர், திரு. அருள் - ஆகியோர்க்குரிய ஊதியங்களை முதலமைச்சர் மு கருணாநிதி வழங்கி வாழ்த்துக்கள் கூறினார்.

இந்நிகழ்ச்சியில், திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தலைவர் திரு. பாரதிராஜா, செயலாளர் திரு. ஆர்.கே. செல்வமணி, துணைத் தலைவர் திரு. விக்ரமன், இணைச் செயலாளர்கள் திரு. அமீர், திரு. ஏகம்பவாணன், செயற்குழு உறுப்பினர்கள் திரு. இ. ராம்தாஸ், திரு. ஆர். மாதேஷ், திரு. பி. வாசு, திரு. ராஜாகார்த்திக் ஆகியோர் உடனிருந்தனர். (டிஎன்எஸ்)

Home  |  About Us  |  Contact Us  |  Subscribe