Tamil Seithi Sevai
  Home    About Us    Contact Us
Login    |   Subscribe

சென்னை அருகே எண்கவுன்டரில் 2 ரவுடிகள் கொலை

சென்னை | Mon, 08 Feb 2010 06:02 PM IST

சென்னை, பிப்.8 (டிஎன்எஸ்)  சென்னை அருகே இருக்கும் பனையூரில் 2 ரவுடிகள் எண்கவுன்டரில் கொலை செய்யப்பட்னர்.

திண்டுக்கல்லை சேர்ந்த பாண்டி என்பவனும், கூடுவாஞ்சேரியை சேர்ந்த வேலுவும் எண்கவுன்டரில் கொல்லப்பட்டனர். இவர்கள் இருவர் மீதும் பல கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் இருக்கின்றன. பாண்டியை போலீசார் தேடி வந்தனர். தலைமறைவாக இருந்த பாண்டி பனையூரில் இருந்ததாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. போலீசார் பனையூருக்கு சென்றனர்.

போலீசாரை கண்டதும் அவர்களை தாக்கி விட்டு தப்பிக்க முயன்றனர் பாண்டி, வேலு. இதையடுத்து தற்காப்புக்காக போலீஸார் இருவரையும் சுட்டதாக கூறப்படுகிறது. இதில் 2 பேரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். (டிஎன்எஸ்)

Home  |  About Us  |  Contact Us  |  Subscribe